ஒர்க் ஃபிரம் ஹோம் என்று வந்தாலும் வந்தது, வேலைக்கும்-வாழ்க்கைக்குமான சமநிலை கலைந்தே போனது. ஒட்டுமொத்த குடும்பமும் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதால் மூச்சு விடும் அவகாசம்கூட சிரமமாகிவிடுகிறது. உடல் சோர்வை விடுங்கள். மன அளவிலான
ஆரோக்கியம் அல்லது சருமத்தின் ஆரோக்கியம்கூட பாதிக்கப்படுகிறது. அதனால்தான் எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதோ அதற்கான ஐந்து டிப்ஸ்...
நீர்ச் சத்து

திரும்பத் திரும்ப சொன்னாலும் தவறில்லை. உடலுக்கு நீர்ச் சத்து அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீர்ச் சத்துடன் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தின் வழியாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதால் ஸ்கின் பளபளப்பாகத் தெரியும். ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Soothe Body Lotion போன்ற இதமளிக்கும் பாடி லோஷன் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. ஃபிரெஞ்சு லேவண்டர், சுத்தமான மொரோக்கோ தேசத்து அர்கன் ஆயில், தேங்காய் எண்ணெய் ஆகிய உட்பொருட்கள் இதில் இருப்பதால் சருமம் இதமாக இருக்கும். இது ஒரு வேகன் தயாரிப்பு என்பதால் எவ்வித சித்ரவதையும் இன்றி, சிலிகான், பாராபென், சாயம் இன்றி தயாரிக்கப்பட்டது.
தியானம்

நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பதால் சதை பிடித்துக்கொள்ளும். இதனால் முதுகு வலி வரலாம். இதுவே உணர்வுரீதியான அழுத்தத்திற்கும் மன அழுத்தத்திற்கும் காரணமாக மாறலாம். அதனால் ஒரு நாளில் சில நிமிடம் பிரேக் எடுத்துக்கொண்டு தியானம் செய்வது நல்லது. இது மனதையும் உடலையும் அமைதியடையச் செய்யும்.
ஒரு பிரேக், புதுப்பித்தல் அவசியம்

தொடர்ந்து ஏதாவது ஒரு ஸ்கிரீன் முன்னால் அமர்ந்திருக்கிறோம். இது கண்ணுக்கு மட்டுமே கெடுதல் அல்ல, மனதிற்கும்தான். 45 நிமிடத்திற்கு ஒரு முறை 10-15 நிமிடம் பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிமுறையை பின்பற்றலாம். இது கண்களுக்கு ஓய்வு கொடுப்பதோடு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்குகிறது. அதோடு Lakmé Blush & Glow Kiwi Sheet Mask போன்ற மேஸ்க் பயன்படுத்தினால் சருமத்திற்கு இன்னும் நல்லது. 100 சதவீத கிவி சாறுகள் கொண்டது இது. இது சருமத்திற்கு நீர்ச் சத்து கொடுப்பதோடு அருமையான பளபளப்பையும் கொடுக்கும்.
எக்ஸ்ஃபாலியேட் செய்யவும்

மன அழுத்தம் அதிகரிக்கும் போதும் சருமத்தில் சீபம் அதிகமாக உற்பத்தியாகும். இது சரும துளைகளை அடைத்துக்கொள்ளும். பருக்கள் உண்டாகும். அதனால்தான் வாரத்தில் 2-3 முறை எக்ஸ்ஃபாலியேட் செய்ய வேண்டும். இதன் மூலம் இறந்த செல்களையும் அதிகமாக சேர்ந்த ஆயிலையும் நீக்க முடியும். St. Ives Radiant Skin Pink Lemon & Mandarin Orange Scrub போன்ற பிரைட்டாக மாற்றும் ஸ்கிரப் பயன்படுத்திப் பாருங்கள். மண்டாரின் ஆரஞ்சு சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். பிங்க் லெமன் சருமத்தின் வறட்சியைப் போக்கும். அதோடு டெர்மடாலஜிஸ்ட் மூலம் டெஸ்ட் செய்யப்பட்ட பொருள் இது. தீங்கு விளைவிக்காமல் தயார் செய்யப்பட்டது இது. பாராபென் சேர்க்கப்படாத பொருள் இது. வேறு என்ன வேண்டும்.
நல்ல தூக்கம்

நல்ல தூக்கம் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும். தினமும் 7-8 மணி நேரம் இடைவெளியின்றி தூங்குவது உடலை அமைதிப்படுத்தி, புதுப்பிக்கிறது. இதனால் மன ஒருமிப்பு அதிகமாகும். மன அழுத்ததை சிறப்பாகக் கையாள முடியும். அதனால் இரவில் படுக்கச் செலலும் 30 நிமிடம் முன்பு எல்லா கேட்ஜட்களின் உபயோகத்தையும் ஓரமாக வையுங்கள். மன அமைதி கொடுக்கும் இசை கேளுங்கள். குரட்டை விட்டு தூங்குங்கள்.
Written by Kayal Thanigasalam on 20th Sep 2021