இந்த சூப்பர் வேகமான அழகு குறிப்புகள் மூலம், நீங்கள் பெற விரும்பும் அழகான, பொலிவான சருமத்தை பெறலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்தக் குறிப்புகள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது என்பதால், சொற்பமான நேரத்திலேயே ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே, இந்த கட்டுரையை ரிலாக்சாக படித்து, உங்கள் சருமத்தை பொலிவாக்கும் விரைவு குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மேக்கப்பை அகற்றுவது

வேலை அல்லது பார்ட்டி முடிந்து, நீங்கள் வீட்டிற்கு
எத்தனை தாமதமாக வந்தாலும் சரி, படுக்கைக்கு
செல்லும் முன் மேக்கப்பை அகற்றுவது மிகவும் முக்கியம். ஏனெனில், உங்கள் சருமம் சுவாசிக்க அது உதவும். இதற்காக மேக்கப் ரிமூவர் அல்லது தூய்மை படுத்தும் வைப்களை பயன்படுத்தலாம். இரண்டும் இல்லை எனில், பேபி ஆயிலை பயன்படுத்தலாம்.
மாய்ஸ்சரைஸ் செய்யவும்

உங்கள் அழகு சாதன பழக்கத்தில் நடை கீரிம் கட்டாயம் இருக்க வேண்டும். கிரீமை பூசும் முன் உங்கள் முகத்தை சுத்தமாக்கி கொள்ள மறக்க வேண்டாம். இந்தப் பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண் விழிக்கும்போது, மென்மையான மற்றும் ஈரப்பதம் மிகுந்த சருமத்தைப் பெறலாம்.
பன்னீர்

கொஞ்சம் பன்னீர் தெளித்துக்கொள்வதன் மூலம் உங்கள் முதத்தை நீர்ப்பசை மிக்கதாகவும், புத்துணர்ச்சி மிக்கதாகவும் மாற்றலாம். ஒரு ஸ்பிரே பாட்டிலில் பன்னீரை நிரப்பி கையில் வைத்திருக்கவும். முகத்தில் அடித்துக்கொண்ட பிறகு டிஷ்யூ காகிதத்தால் துடைக்கவும். இதனால் முகம் மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
பவுண்டேஷன் உத்திகள்

பவுண்டேஷனில் 2 அல்லது 3 சொட்டு பேசியல் ஆயிலை சேர்த்துக்கொள்வது அழகு கலை வல்லுனர்கள் கடைபிடிக்கும் ரகசியமாக இருக்கிறது. இது முகத்திற்கு அழகிய, ஈரப்பதம் மிக்க தோற்றத்தை அளிக்கிறது. ஈர்ப்பையும் உண்டாக்குகிறது.
Written by Amani Nagda on 8th Sep 2018
Author at BeBeautiful.