உப்பு ஸ்கிரப் முதல் சர்க்கரை ஸ்கிரப் வரை: வேறுபாடுகளும், தேர்வு செய்தலும்

Written by Kayal Thanigasalam23rd Jul 2021
 உப்பு ஸ்கிரப் முதல் சர்க்கரை ஸ்கிரப் வரை: வேறுபாடுகளும், தேர்வு செய்தலும்

முகத்தின் பாதுகாப்பு என்று வரும்போது, இறந்த செல்களை நீக்க வேண்டும். உடல் பாதுகாப்பதற்கான வழிமுறைகளில் பழைய பழக்கங்களே இன்னும் பிரபலமாக பின்பற்றப்படுகின்றது. ஏனெனில், AHA மற்றும் BHA போன்ற உடலுக்குள் செலுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் விலையுயர்வாக இருப்பதால், செலவைக் கருத்தில் கொண்டு உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கிரப்ஸ்கள் இன்னும் அதிகம் உபயோகப்படுகின்றன. இத்தகைய சமையலறை பொருட்களை நீங்களே பயன்படுத்திக் கொள்ள முடியும் அல்லது பரிந்துரைக்கபடாத பொருட்கள் மற்றும் அவற்றிலுள்ள உட்பொருட்கள் சருமத்தின் மேற்பரப்பிலுள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கும் உதவி செய்கின்றன. இவை இரண்டிற்குமிடையேயுள்ள முக்கியமான வேறுபாடுகள் என்ன மற்றும் அதில் எதை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்வதற்கான தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

 

உப்பு ஸ்க்ரப்

உப்பு ஸ்கிரப் முதல் சர்க்கரை ஸ்கிரப் வரை: வேறுபாடுகளும், தேர்வு செய்தலும்

 

இவை இரண்டில் பொதுவாக பயன்படுத்தப்படுவது உப்பு ஸ்க்ரப்.  உயர் தரமான தாதுப் பொருட்கள் இருப்பதுடன், இதில் வீக்கத்துக்கான எதிர்ப்பு சக்தி மற்றும் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தியும் அடங்கியுள்ளது.  மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் A மற்றும் C போன்ற உயர்தரமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், உப்பு மணிகள் அளவில் பெரிதாகும் மேலும் இயற்கையிலேயே சிராய்ப்பு தன்மையையும் உடையது. உடலின் கால்மூட்டுகள் , பாதங்கள், கை மூட்டுகள் மற்றும் கால்கள் முதலிய சருமம் மிகவும் உலரக்கூடியப் பகுதிகளில் இதை பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும்.

சர்க்கரை ஸ்க்ரப்
சர்க்கரை ஸ்க்ரப்கள் பெரும்பாலும் இயற்கை மற்றும் கொழுப்பு சத்துள்ள எண்ணெய்களுடன் சேர்க்கப்படுகின்றன. இது இயற்கையிலேயே  மிகவும் நீரேற்றம் கொண்டவையாக இருக்கும். சர்க்கரையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்த போது இறந்த செல்களை வெளியேற்றுவதற்கான  மிகச் சிறந்த வழியாகும் அதே நேரத்தில்,  ஈரத்தை கவரும் தன்மை இதிலிருப்பதால்,  இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.  சர்க்கரையின் நுண்ணிய துகள்கள் ஒரே சீராகவும், அளவில் சிறியதாகவும் இருப்பதால் உப்பு ஸ்க்ர்ப்புடன் ஒப்பிடுகையில் சர்க்கரை ஸ்க்ரப்புகள் சருமத்தின் மீது மிகவும் மென்மையாகச் செயல்படும்.  அதிகளவு சர்க்கரை ஸ்க்ரப்ஸை பயன்படுத்துவதால் அதிலுள்ள க்ளைகேட்டட் புரோட்டீன் உங்கள் சருமத்தின் மீது சேருவதினால் ஏற்படக்கூடிய முக்கியமான பக்க விளைவான சரும முதிர்வு ஏற்படும். எனவேதான், உப்பு மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்புகளை ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படுகிறது.  

 

உப்பு ஸ்கிரப் முதல் சர்க்கரை ஸ்கிரப் வரை: வேறுபாடுகளும், தேர்வு செய்தலும்

உங்கள் சருமத்தின்  மென்மைத்தன்மையையும், தேவையையும் மதிப்பீடு செய்வதற்கு உங்கள் சரும வகைக்கேற்ற சரியான ஸ்க்ரப்பை தேர்வு செய்வதே சிறந்த வழியாகும்.  ஏற்கனவே, நாங்கள் கூறியது போல் உப்பு ஸ்க்ரப்புகள் இயற்கையிலேயே வறண்ட தன்மையையுடையதாகும். எனவே,  தளர்ந்த மற்றும் நீர்ச் சத்து குறைந்த சருமத்திற்கு இதை பயன்படுத்தக் கூடாது.   உடைதல், சூரியக்கதிரால் பாதிப்பு, வீக்கம் மற்றும் விரசல் போன்ற பாதிப்புகளுக்குள்ளான சருத்திற்கு உடலுக்கான எக்ஸ்ஃபாலியண்டை பயன்படுத்தக் கூடாது. உடலில் ஏற்படாமல் சிறுசிறு சிராய்ப்புகளை குறைப்பதற்கு  மிக மெல்லிய மணிகளை உடைய ஸ்க்ரப்புகளை பயன்படுத்துங்கள்.  மிகப் பிரபலமான உப்பு மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.  எண்ணெய் சருமத்திற்கு நச்சுத்தன்மையை நீக்கும் உப்பு ஸ்க்ரப்
சுத்திகரிக்கப்பட்ட உப்பு, வேப்பிலைப் பொடி, இரண்டு அல்லது மூன்று சொட்டு துளசி நீர் அல்லது தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் அல்லது திராட்சைவிதை  ஆயில் போன்றதொரு ஒரு கேரியர் ஆயில் ஆகியவற்றால் கலந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் பசையுள்ள கோடைகாலத்தல் ஏற்படும் சருமத்தில்  ஒரு நல்ல பயனைத் தரக்கூடிய உப்பு ஸ்க்ரப்பை பயன்படுத்தப்படலாம்.  ஸ்க்ரப்பை உடனடியாக பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்தியவுடன் ஒரு கண்ணாடி ஜாடியில் மிகவும் இறுக்கமாக வைக்கவும், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அதைப் பயன்படுத்திவிட வேண்டும்
.
2.  அழுத்தத்துடன் இருக்கும் சருமத்திற்கு நீரேற்றமுள்ள சர்க்கரை ஸ்க்ரப்
 இறந்த செல்களை நீக்குவதற்கும், சருமத்தின் அழுத்தம் நீங்குவதற்கும்  மிக மெல்லிய மணிகளையுடைய சர்க்கரை. க்ரீன் டீ தூள், இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் லேவண்டர் எஸன்ஷியல் ஆயிலுடன் கலவை நன்றாக கலப்பதற்கு  வெண்ணெய் எண்ணெயை சேர்த்துக் கலந்து பயன்படுத்துவதே மிகச் சிறந்த வழியாகும். ஸ்க்ரப்பை உடனடியாக பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்தியவுடன் ஒரு கண்ணாடி ஜாடியில் மிகவும் இறுக்கமாக வைக்கவும், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அதைப் பயன்படுத்திவிட வேண்டும்.
 

                                 

 

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
781 views

Shop This Story

Looking for something else