இன்று உலகில் உள்ள எந்த பெண்களை கேட்டாலும் அவர்களது பயங்களில் முதலிடத்தை பிடிப்பது முடிகொட்டுதலும் மற்றும் முகப்பருக்களாகவே இருக்கும். அதில் மிகவும் சோகமானது என்னவென்றால் இளவயதில் தோல்களில் கன்னங்களில் மற்றும் முகத்தாடையில் வரும் முகப்பருக்களாகும். அந்த சிவப்பான, தொல்லைமிகுந்த வலிக்கின்ற முகப்பரு "சோகத்தின் அறிகுறி" ஆக தென்படும். ஆனால் எப்பொழுதும் போல உதவிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தாடையிலும் மற்றும் கன்னங்களிலும் உள்ள முகப்பருக்களை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றும் அவற்றை எவ்வாறு போக்குவது என்பதற்கான வழிமுறைகள்? படிக்க தயாராகுங்கள்...
ஹார்மோன் முகப்பரு என்றால் என்ன?

ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையின்மை காரணமாக ஏற்படுவதே இவ்வகையான முகப்பருக்கள் மற்றும் இது பெண்களுக்கு பரவலாகவே இருந்து வருகிறது. பருவமடைதல் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இவ்வகையான பருக்கள் முகத்தாடையில் தொடங்கி கன்னங்கள் வரை பார்க்கலாம். அழற்சியடைந்த தோல், அதீத எண்ணெய் பிசுக்கு ஆகியவை ஹார்மோன் சமநிலையின்மையின் மூலம் ஏற்படுகின்றது.
ரெட்டினாய்டுகளை பயன்படுத்துங்கள்: எளிதில் கடைகளில் கிடைக்கக்கூடிய ரெட்டினாய்டுகள் முகப்பருவிற்கு அற்புதமாக வேலை செய்கிறது. விட்டமின் A மூலம் கிடைக்கும் இது லோஷனாகவும் மற்றும் ஜெல்லாகவும் பயன்படுத்தலாம்.

கருத்தடை மாத்திரைகள்: எத்தினைல் எச்ட்ராடியோள் கொண்ட கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமாகவும் ஹார்மோன் முகப்பருவை கட்டுப்படுத்தலாம்.
கிரீன் டீ: கிரீன் டீ குடிப்பதாலும் மற்றும் அந்த சத்துக்கள் அடங்கிய லோஷன் அல்லது ஜெல் தடவுவதன் மூலமாகவும் இயற்கையான முறையில் அழற்சியடைந்த தோல் மற்றும் முகப்பருக்களை சரிசெய்யலாம்.
டீ ட்ரீ ஆயில்: டீ ட்ரீ ஆயில் அடங்கிய அழகுசாதனத் தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலமாகவும் இயற்கையான முறையில் முகப்பருக்களை அகற்றலாம். நேரடியாக பயன்படுத்த விரும்பினால் இதனை மற்றொரு எண்ணையில் கலந்து, பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
இந்த வழிமுறைகளை பின்பற்றியும் குணமாகாத நிலையில் நீங்கள் ஒரு தேர்மடாலஜிஸ்டை
Written by Kayal Thanigasalam on 5th Jan 2022